இழுத்தடித்த சிம்பு – சுதா கொங்கரா! கடுப்பாகி கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்?
இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிம்பு இருவரும் ஒரு திரைப்படத்தின் மூலம் இணையவிருந்தார்கள். இவர்கள் இருவரும் இணையும் அந்த திரைப்படத்தினை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவிருந்ததாம். இந்த தகவல் கடந்த ஆண்டிலிருந்தே பரவி வந்த நிலையில், இன்னும் இந்த படத்துக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை.
படத்தின் அறிவிப்பு கூட வெளியாவத நிலையில் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிம்பு இருவரும் இணையும் படம் நடக்குமா என கோலிவுட் வட்டாரத்தில் கேள்வி எழும்பியது. இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இவர்கள் இருவரும் இணையவுள்ள படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே பிலிம்ஸ் விலகி விட்டதாம்.
ஏனென்றால், நடிகர் சிம்பு அடுத்ததாக அவருடைய 48-வது படம் அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க தொடர்ச்சியாக நடிக்க கமிட் ஆகிவிட்டாராம். அதைப்போல, சுதா கொங்கராவும் சூர்யாவின் 43-வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறார். எனவே, அவரும் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக அவர் சிம்புவை வைத்து இயக்கவுள்ள படத்தின் வேலைகளில் ஈடுபடமுடியவில்லை. தயாரிப்பு நிறுவனம் கேட்டாலும் அப்போது பண்ணலாம் இப்போது பண்ணலாம் என சிம்பு மற்றும் சுதா இருவரும் இழுத்தடித்தார்களாம்.
இதனால் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் சிம்புவும் சுதா கொங்கராவும் மாற்றி மாற்றி படங்களில் கமிட் ஆகி வருவதன் காரணமாக இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்தினை நாங்கள் தயாரிக்கவில்லை என கூறி படத்தில் இருந்து விலகி விட்டார்களாம். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் போல ஒரு பெரிய நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முதலில் முன் வந்துள்ளது என்றால் கண்டிப்பாக படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள படமாக தெரிகிறது.
எனவே, தற்போது சற்று கடுப்பாகி ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி உள்ள காரணத்தால் இந்த படங்கள் நடக்குமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. மேலும், சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.