அட இது நம்ம சிலம்பரசனா? மாஸ் கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ!

STR48 - simbu

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘STR 48’ படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் அடுத்தகட்ட அப்டேட்காக காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில், இயக்குனர் தேசிங் பெரியசாமி சிம்புவுடன் முக்கிய பேசுவரத்தையில் இருப்பது போல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிம்பு பின்புறம் இருப்பது போல் கட்டப்பட்டுள்ளது, அவரது முகம் தெரியவில்லை என்றாலும், பின்புறம் ஹேர் ஸ்டைல் பயங்கரமாக இருக்கிறது.

மேலும், அந்த பதிவில், “பாசிட்டிவ் மைண்ட் பாசிட்டிவ் வைப்ஸ்” என்று குறிப்பிட்டுஇருக்கிறார். அந்த புகைப்படத்தில், மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில், ஏதோ பெரிய சம்பவம் இருப்பது போல் என்று கர்ஜிக்கும் சிறுத்தையைக் காட்டுகிறது.

இந்த படத்துக்காக இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் அவர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை முடித்த சிம்பு இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்