நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
மேலும் இந்த கோவிலில், டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யதாராம். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து மிகுந்து பயபக்தியுடன் தனது வேண்டுதலை கோரிக்கையாக வைத்தார்.
இதையும் படியுங்களேன்- பெரிய தொகை கொடுத்து “மாவீரன்” படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.!
பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். என்னிடம் பலர் என்னுடைய மகன் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும்.
என் மகனுக்கு நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு வேண்டுயுள்ளேன். விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடக்கும்” என கூறியுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கடவுளின் அருளால் அவருக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் என வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…