பிரம்மாண்ட படத்தில் சிம்பு..! ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் …? சோகத்தில் ரசிகர்கள் .!
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
அந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிமில் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்களேன்- மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய ஹன்ஷிகா.! மொத்தமா எத்தனை படங்கள் தெரியுமா.?
எனவே, அந்த படத்தில் சிம்பு தான் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாவும் நம்பதக்க சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இது சுதா கொங்கராவின் கனவும் திரைப்படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள இந்த பிரமாண்ட படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஒரு சில ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தாலும் கூட, சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் சரியான விமர்சனத்தை பெறவில்லை இதனால் வேறு ஹீரோயினை போடலாமே என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.