நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிம்புவை பற்றி பாராட்டி பேசும்போது உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று சிம்பு கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, இதன் காரணமாக கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து ஒரு படத்தில் கூடிய விரைவில் நடிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்தனர்.
அவர்களுடைய எதிர்பார்ப்பை போலவே இரண்டு தகவல்கள் அதற்கு அடுத்த படியாக வெளியானது. ஒன்று கமல்ஹாசன் சிம்புவின் 48-வது படமான ‘STR 48’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. ஏனென்றால், அந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். எனவே, ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது.
சம்பளத்தை சரியாக கொடுக்காத தயாரிப்பாளர்! கடுப்பாகி மெகா ஹிட் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?
அதைப்போல, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், தேதி பிரச்சனை காரணமாக சிம்பு இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையாம்.
சிம்பு தற்போது தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிப்பதற்காக நீண்ட முடியுடன் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கி படம் 2025-ஆம் ஆண்டு தான் வெளியாகவிருக்கிறதாம். எனவே, இந்த படத்தில் தற்போது பிஸியாக இருப்பதால் தன்னால் கமல்ஹாசன் நடிக்கும் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதனால் அவருக்கு கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் போய்விட்டதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடிக்க மறுத்துள்ள அந்த கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த தக்லைஃப் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான சின்ன டீசர் கூட சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…