மீண்டும் ஜோடி சேரும் சிம்பு-ஹன்ஷிகா !!!!!
- நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர்.
- அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகும் மஹா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் “வந்தாராஜாவாதான்வருவேன்”.
தற்போது இந்த படம் திரையில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது “மாநாடு” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகிய இருவரும் சேர்ந்து “வாலு” படத்தில் நடித்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தற்போது அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகும் மஹா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த படம் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.