Simbu [File Image]
STR 48 படத்திற்காக சிம்பு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த பேனரான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கீழ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘STR 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக உருவாகி வரும் பெயரிடப்படாத இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தனது கதாபாத்திரத்திற்காக தாய்லாந்தில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார், மேலும் அவர் சமீபத்தில் சில தீவிர உடற்பயிற்சிகளுக்காக லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது, தனது உடல் மாற்றம் குறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். அந்த வீடியோவில், வெளிநாட்டில் விடுமுறையை அனுபவித்து வரும் சிம்பு, கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தான் உடலை மெருகேற்றியுள்ளார். STR 48 படத்திற்காக தனது புதிய தோற்றத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.
மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன், ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார். சிம்புவின் இந்த புதிய தோற்றத்தைப் பார்த்து சிம்புவின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு முன்னதாக மாநாடு படத்தின் ரிலீஸ்க்கு பின், தீவிர உடற்பயிற்சி செய்து உடலமைப்பை மாற்றி கொண்ட வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…