100 கிலோ to 70 கிலோ.! Dr.சிலம்பரசனின் அட்டகாசமான காம்பேக் வீடியோ.!
நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை.
இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று கூறும் அளவுக்கு சிம்பு குண்டாக இருந்தார்.
பின்னர் தனது ரசிகர்களுக்காக மீண்டும் எடையை குறைத்து பழைய சிம்புவாக வெளியே வர வேண்டும் என தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை 100 கிலோவிலிருந்து 70 கிலோ வரை குறைத்து மாநாடு திரைப்படத்தில் பழைய தோற்றத்தில் நடித்து முடித்தார். அந்த படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது. இதனால் சிம்புவின் அடுத்தடுத்த படங்களில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிம்புவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அவர் எவ்வாறு உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து ஒரு வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
அதில் 100 கிலோவில் இருந்து பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகளை செய்து எப்படி உடல் எடையை குறைத்தார் என்பதை உயிரோட்டம் மாறாமல் வலிகளுடன் சிலம்பரசன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு அதுமட்டுமல்லாமல் தனது வாழ்வில் காம்பேக் கொடுக்க நினைக்கும் மற்றவர்களுக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.