நான் சிந்திய கண்ணீர் துளிகளை தரையில் விழாமல் தாங்கி பிடித்த உங்கள் அன்பில் நான் அடங்கிப்போகிறேன்.! – சிம்பு உருக்கம்.!
மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் கடந்த வார வியாழக்கிழமை வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு மாஸ் காம்பேக் ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை திறம்பட இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சிலம்பரசன் மேடையிலேயே கண்ணீர் விட்டார். அது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து தியேட்டர்களிலும் மாஸ் ஓப்பனிங் கிடைத்தது.
இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் தற்போது நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வெற்றியை அள்ளிக்கொடுத்துள்ளது. இதற்கு காரணமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு, தியேட்டர்காரர்கள், விநியோகிஸ்தர்கள், என் ரத்தமான ரசிகர்கள் ஆகியோருக்கு பெரிய நன்றி கடன்பட்டுள்ளேன்.
ஆடியோ விழாவில் நான் சிந்திய கண்ணீர் துளிகளை தரையில் விழாமல் தாங்கி பிடித்த உங்கள் அன்பில் நான் அடங்கி மகிழ்கிறேன். ‘ என உருக்கமாக தனது நன்றியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.