சிம்பு – சுதா கொங்காரா நிச்சயம் ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவிக்கு மாநாடு மிக பெரிய காம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் வெற்றி சிம்பு அடுத்த எந்த படத்தில் நடிக்கிறார் அப்படம் எப்போது வெளியாகிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா பார்க்க வந்திருந்தார். அப்போது இருந்தே இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர் என்கிற பேச்சு எழுந்தது.
அதன் பின்னர், சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பிஸியாகிவிட்டார். அந்த படங்களை முடித்து தான் அடுத்த படம் நடிப்பார் என கூறப்படுகிறது. அதே போல சுதா கொங்கராவும் அடுத்து சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளாரம்.
சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் கண்டிப்பாக சிம்பு – சுதா கொங்காரா ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும், அதனை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…