சிம்புவின் 50வது படம் பற்றிய மாஸ் அப்டேட்.! இயக்குனர் பெயரை கேட்டல் அசந்துவிடுவீர்கள்.!

சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்க்ஸை கோலாகலமாக தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து அவர் தனது படங்களின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார்.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று மீண்டும் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த படத்தை அடுத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை அடுத்து ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து சிலம்பரசனின் 50வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025