siddhiidnani [Image source : file image ]
சிம்பு நடிப்பில் வெளியான வெந்துதணிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சித்தி இத்னானி. இவர் இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட வெந்துதணிந்தது காடு படம் தான் அவருக்கு நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது.
நடிகை சித்தி இத்னானி கன்னத்தில் விழும் குழியின் அழகுக்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், நடிகை சித்தி இத்னானி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அழகான சுடிதார் அணிந்துகொண்டு அம்சமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சில ரசிகர்கள் நீங்கதான் ‘கண்ண குழி அழகி’ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் சித்தி இத்னானி வெந்துதணிந்தது காடு படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தையா இயக்கியுள்ள காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…