ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை மிகவும் அருமையாக இவர் நடித்து கொடுக்கக்கூடியவர்.
இவரது நடிப்புக்காகவே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இந்த நிலையில், இன்று தனது 36-வந்து பிறந்த நாளை நடிகை அதிதி ராவ் கொண்டாடுகிறார். எனவே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- மொத்த அழகையும் கொஞ்சமாக காட்டி ரசிகர்களை சொக்கவைத்த கீர்த்தி ஷெட்டி.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….
அந்த வகையில், நடிகர் சித்தார்த்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ராவ்வுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சந்தோசத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதவில் ” மிகவும் மகிழ்ச்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதய இளவரசி அதிதிரா உங்கள் கனவுகள் அனைத்தையும் நான் பிரார்த்தனை செய்கிறேன் பெரியவை, சிறியவை மற்றும் இன்னும் பார்க்கப்படாதவை எப்போதும் உண்மையாக இருங்கள்” என ஒரு இதயத்துடைய எமோஜியுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஏற்கனவே இவர்கள் இவரும் காதலிப்பதாகவும், ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சித்தார்த் அதிதி ராவ்வுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு “இதய இளவரசி” என பதிவிட்டிருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நெட்டிசன்கள் பலரும் இவர்கள் காதலிப்பது உறுதியாகிவிட்டது எனவும், இந்த ஜோடி சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்களா அல்லது நண்பர்களா என்பதை அவர்களே அறிவித்தால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…