சித்தார்த் மல்லையா: விஜய் மல்லேயாவின் மகனான சித்தார்த் மல்லையா அவரது காதலியை தற்போது காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஜய் மல்லையா. இவர் தொழிலுக்காக வங்கிகளில் எக்கச்சக்கமான கடன்களையும் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால் லண்டனில் குடும்பத்தினருடன் செட்டில் ஆனார்.
விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்கிற மகன் உள்ளார். சித்தார்த், பாலிவுட் நடிகர் ஆவார். மேலும், இவர் பாலிவுட் நடிகைகளுடன் அவ்வப்போது காதல் கிசுகிசுவிலும் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் சித்தார்த்தும் சில ஆண்டுகள் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காதலை முறித்து கொண்டு பிரிந்தனர். அதன் பின் தீபிகா படுகோன் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, கடந்த சனிக்கிழமை அன்று சித்தார்த் மல்லையா அவர் காதலித்த பெண்ணான ஜாஸ்மினை மனம் முடித்துள்ளார். சித்தார்த்தும், ஜாஸ்மின் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதிலும், அமெரிக்காவில் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் திருவிழாவின் போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் அப்போது வைரலாக பரவி வந்தது.
இதனால், கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் ஜாஸ்மினை கரம் பிடித்தார் சித்தார்த். இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொடுள்ளனர்.
நேற்றைய நாளில் இந்த புகைப்படங்களை அவரும், அவரது மனைவியான ஜாஸ்மினும் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் அதை பார்த்த ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…