காதலி ஜாஸ்மினை கரம் பிடித்தார் சித்தார்த் மல்லையா..! வைரலாகும் க்யூட் கிளிக்ஸ்!

சித்தார்த் மல்லையா: விஜய் மல்லேயாவின் மகனான சித்தார்த் மல்லையா அவரது காதலியை தற்போது காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஜய் மல்லையா. இவர் தொழிலுக்காக வங்கிகளில் எக்கச்சக்கமான கடன்களையும் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால் லண்டனில் குடும்பத்தினருடன் செட்டில் ஆனார்.
![Siddharth Mallya Weds Jasmine [file image]](https://static-ai.asianetnews.com/images/01j147dafk1wzpfeghrdsjrycj/snapinsta-app-448888602-917489360422327-1906987785339902451-n-1024.jpg)
குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் சித்தார்த்தும் சில ஆண்டுகள் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காதலை முறித்து கொண்டு பிரிந்தனர். அதன் பின் தீபிகா படுகோன் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![Siddarth Mallaya - Jasmine Marriage Pics [file image]](https://static-ai.asianetnews.com/images/01j147d82rgyprvdsq6dh552hs/snapinsta-app-448890722-917489300422333-2810964583552503507-n-1024.jpg)
அதிலும், அமெரிக்காவில் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் திருவிழாவின் போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் அப்போது வைரலாக பரவி வந்தது.
![Siddarth Mallaya Marriage Pics [file image]](https://static-ai.asianetnews.com/images/01j147d2rvv9tf84681kjzb32m/new-project---2024-06-24t094205-371.jpg)
![Siddarth Mallaya Marriage Pics [file image]](https://static-ai.asianetnews.com/images/01j147cnnfhgc2hp3tgr2raezc/new-project---2024-06-24t094103-935.jpg)
நேற்றைய நாளில் இந்த புகைப்படங்களை அவரும், அவரது மனைவியான ஜாஸ்மினும் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் அதை பார்த்த ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.