Siddharth – Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. மேலும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் திருமணம் தொடர்பாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக லிவிங் உறவில் இருந்து வரும் சித்தார்த்தும் அதிதியும் தங்களுடைய உறவை ஒருபோதும் வெளிப்படுத்த வில்லை என்றாலும், அவர்கள் பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். தெலுங்கு படமான ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பில் சித்தார்த் அதிதியை சந்தித்ததாகவும், படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சொல்லப்போனால், இது சித்தார்த்துக்கு இரண்டாவது திருமணமாகும். ஆம், தனது சிறுவயது தோழியான மேக்னாவை மணந்த சித்தார்த், 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். அதே போல், இது அதிதிக்கும் இரண்டாவது திருமணம், இதற்கு முன்பு சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கடந்த 2012-ல் அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…