Shriya Saran தமிழ் சினிமாவில் சிவாஜி, குட்டி, அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தற்போது மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டும், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.
இந்நிலையில், மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் ஸ்ரேயா சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவர் கூட வெளியே போனாலே எதாவது சொல்றாங்க என சற்று வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கணவர் கூட வெளியே போனாலே எதாவது சொல்றாங்க என நடிகை ஸ்ரேயா சரண் வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் தேவையில்லாத மனிதர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சிலர் பேசிய சில வார்த்தைகளைக் கேட்டாலே எனக்கு இன்னும் வலிக்கிறது. அவர்கள் பேசிய அந்த வார்த்தைகளை மறக்க தான் நான் என்னுடைய பழைய நண்பர்களிடம் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறேன்.
நான் என் கணவர் மற்றும் மகளுடன் வெளியே செல்லும்போது கூட, மக்கள் என்னைப் பார்த்து ஏதாவது சொல்கிறார்கள். ஆனால் நான் எனக்கு பிடித்த உடையை அணிகிறேன். எனக்கு ஏதாவது பிடித்திருந்தால். நான் அதை அணிவேன். என்னை பொறுத்தவரை நான் நல்லவள் என்று எனக்குத் தெரியும். மற்றவர்கள் என்னை அப்படி பார்த்தால் அது அவர்களின் பிரச்சனை.. என்னுடையது அல்ல” என்று ஸ்ரேயா சரண் வேதனையுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை ஸ்ரேயா சரண் ‘ஷோ டைம்‘ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தத் தொடர் மார்ச் 8 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…