10 வயது குறைவான காதலரை திருமணம் செய்த சிவாஜி பட நடிகை?
தமது காதலன் ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ (Andrei Koscheev) நடிகை ஷ்ரியா சரண் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷ்ரியா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
ஷ்ரியா தமது நீண்ட நாள் காதலரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ கடந்த 12-ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடப்பதாக வந்த தகவலை ஷ்ரியா சரண் மறுத்த நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஷ்ரியாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி ஷபானா மட்டும் திரைத்துறையில் இருந்து இந்த திருமணத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.ஷ்ரியா காதலருக்கு அவரை விட 10 வயது குறைவு என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.