manju warrier asuran [file image]
தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு முன்பு மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்கு அசுரன் படத்தில் தான் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அஜித்திற்கு ஜோடியாக துணிவு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படி தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஆனால், அது எல்லாம் ஒரு பக்கம் அவர் எதிர்கொண்டாலும் சினிமாவில் தன்னுடைய வேலை என்னவோ அதனை பார்த்துக்கொண்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
அவருக்கு என்ன பிரச்சனை என்றால் மஞ்சு வாரியர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் தான் பிரச்சனைகளை சந்தித்தார். அதைப்போல, நடிகை ஒருவரை கடத்தி தாக்கப்பட்ட வழக்கிலும் மஞ்சு வாரியார் பெயர் அடிபட்டது. பிறகு அவரை காவல்துறையினர் விசாரணை நடைபெற்றது. இப்படியான பல பிரச்சனைகள் வந்தபோதிலும் அதனை கொஞ்சம் கூட வெளியே காட்டிகொள்ளாத மஞ்சு வாரியார் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மஞ்சு வாரியர் போல தான் என்ன நடந்தாலும் நம்மளுடைய வேலைகளை நாம் செய்யவேண்டும் என்பதனை பற்றி கற்றுக்கொள்ளவேண்டும் என முன்னணி நடிகையான நித்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் அனைவர்க்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார். குரங்கு மனசு, கலாட்டா குடும்பம், புஷ்பாஞ்சலி, வேலன், உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சு வாரியார் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் மஞ்சுவாரியாரை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நம்மளுடைய தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் நம்மளுடைய முண்ணேற்றத்திற்கு தடையாக இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் அதனை ஒரு பக்கம் வைத்துவிட்டு நம்மளுடைய வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனை மஞ்சுவாரியர் நன்றாக செய்துகொண்டு இருக்கிறார். எனவே, அவரை பார்த்து நான் மட்டுமில்ல மற்றவர்களுக்கு இதனை கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்” எனவும் நித்யா தெரிவித்துள்ளார்.மேலும், நடிகை மஞ்சு வாரியார் துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…