ஷூட்டிங் ஓவர்..விரைவில் நிவின் பாலியின் புது பட அப்டேட்.!?
பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், உள்ளிட்ட சில படங்களை இயக்கிதமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டதாக இருக்கும். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். வழக்கம் போல் ராம் படம் என்பதால் யுவன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதற்கான புகைப்படங்களும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில். அடுத்தாக டப்பிங் பணிகள் எடிட்டிங் பணிகள் தொடங்கப்படவுள்ளது. அதற்குமுன்பு இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.