நடிகை நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி? 8 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்!

நடிகை நிவேதா பெத்துராஜ், சென்னை அடையாறு சிக்னலில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Nivetha Pethuraj

சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். 2015 இல், அவர் மிஸ் இந்தியா UAE போட்டியில் வென்றார்.

பின்னர், அதற்கு அடுத்த ஆண்டே 2016ல் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு டிக் டிக் டிக் என பல படங்களில் நடித்தார். குறிப்பாக, நிவேதா பெத்துராஜ் சமூக வளை தளங்களில் பிரபலமானவர், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், 8 வயது சிறுவன் தன்னிடம் பணம் வாங்கியதாக நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் தனது பதிவில், “அடையார் சிக்னலில் என்னிடம் சிறுவன் ஒருவன் இலவசமாகப் பணம் கேட்டான். கொடுக்க மறுத்த என்னிடம் ஒரு புத்தகத்தை விற்பனை செய்ய முயன்றான், ரூ.100ஐ கொடுத்தேன்.

ஆனால், சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அதற்கு மறுத்த நான், ரூ.100 திரும்ப வாங்கினேன். அப்போது புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன், என் கையிலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்