நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
தற்பொழுது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவி பல அதிரடி படங்களில் முத்திரை பதித்தாலும், குடும்ப படங்களில் இந்த திரைப்படம் இடம்பெறும் என்று இயக்குனர் கூறியுள்ளார். ஜீவாவை வைத்து ‘சிவா மனசுல சக்தி’ என்ற காதல் கலந்த படத்தை காமெடியாக எப்படி செய்திருந்தாரோ அதேபோல், ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படமும் அமையும் என்று தெரிகிறது.
பிரதர் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி கணேஷ், நட்டி, சீதா, அச்யுத் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதற்கு முன், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து படங்களை வழங்க உள்ளார். கான் வரிசையில், அகமது இயக்கிய ‘இறைவன்’ திரைப்படம் செப் 28 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…