அயோக்யா படத்தில் விஷாலுடன் நடனம் ஆடினார் ஷ்ரத்தா தாஸ் !!!
- நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்.
- இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு ஷ்ரத்தாதாஸ் நடிகர் விஷாலுடன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். விஷால் தற்போது நடித்து வரும் படம் ‘அயோக்யா’. நடிகர் விஷால் “சண்டக்கோழி” படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர்நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு ஷ்ரத்தாதாஸ் நடிகர் விஷாலுடன் குத்தாட்டம் போட்டுஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.