ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய ஏர்லைன்ஸ்
பல மொழிகளில் பாடி தன் பாடலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.மேலும் இவர் இந்தி , தமிழ் , மலையாளம் ,கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பாடி புகழ்பெற்றவர். மேலும் தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவருடைய மனம் புண்படும் படியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.அண்மையில் வெளியூர் செல்வதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ல் முன்பதிவு செய்துள்ளார்.அவரோடு அவர் கொண்டு சென்ற இசை கருவிகளுக்கு அனுமதி அளிக்காமல் அவரை அவமதித்து உள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இசைகலைஞர்கள் இல்லையேல் பொதுமக்கள் இசைக்கருவிகளோடு விமானத்தில் பயணிக்கக் கூடாது என்றே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்விருப்பமாக உள்ளது என்று தெரிவித்தார்.
I guess @SingaporeAir does not want musicians or any body who has a precious instrument to fly with on this airline. Well. Thank you. Lesson learnt.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 15, 2019
ஸ்ரேயா கோஷலின் இந்த ட்விட் அவருடைய ரசிகர்கள் இடையே பரப்பாக பேசப்பட்ட நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஸ்ரேயா கோஷலின் ட்விட்டர்
கணக்கிற்கு இரு செய்தியை அனுப்பியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஸ்ரேயாவிடம் மன்னிப்பு கோரியது.மேலும் இனி இவ்வாறு நடைபெறாது என்று அந் நிறுவனம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.