துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷெரின். இவருக்கு அந்த காலத்தில் இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். துள்ளுவதோ இளமை படம் வெளியான அந்த சமயம் பல முன்னணி நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தார்கள். பிறகு ஷெரின் என்ட்ரி ஆன பிறகு, அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே கூறலாம்.
துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து ஷெரின் விசில், பூவா தலையா, ஜெயா, சிஹிகலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சி, குக்வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம்.
இந்நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் நடிகை ஷெரின் வேறு மாதிரியான தொழிலுக்கு மாறிவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஷெரின் குறித்து பேசிய அவர் ” ஷெரின் நடித்த இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அவருடைய மார்க்கெட் போனதற்கு கரணம் என்னவென்றால், அவருடைய திறமையின்மை தான்.
ஷெரினின் முகம் ஜப்பான் நாட்டில் உள்ளவர் போல இருக்கும். மற்றோரு பக்கம் பார்த்தால் லண்டன் பெண் மாதிரி இருப்பார். அவரிடம் தமிழ் நடிகைக்கு உள்ள ஒரு தோற்றம் இல்லாத காரணத்தால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாம், கன்னடம் இதில் எந்த மொழிகளில் நடிக்கும் ஹீரோயின்களின் தோற்றமே ஷெரின் கிட்ட இருக்காது.
அவருடைய கண்களுக்கும் பூனைக்கு இருப்பது போல இருக்கும். இதனால் பல நல்ல இயக்குனர்கள் அவரை தங்களுடைய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, எனவே தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் வேறு மாதிரியான தொழிலுக்கு அவர் சென்றுவிட்டார்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
ஷெரின் சொந்தமாக எதாவது பொருட்கள் கடை அல்லது துணி கடை என எதாவது தொழில் தொடங்கியுள்ளாரா என்று கூறாமல் வேறு தொழில் என கூறியுள்ளதால் ரசிகர்கள் என்ன தொழில் தெளிவாக சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகை ஷெரின் கடைசியாக நன்பேண்டா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…