இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த இரண்டு பாகத்திலும் பூங்குழலி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றே சொல்லலாம். இந்த படம் வெளியான சமயத்தில் இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாழ்ந்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தான் அவர் அடுத்ததாக பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இல்லயாம்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கு பதிலாக நடிகை நிவேதா பெத்துராஜ் தான் நடிக்க விருந்தாராம். படத்தில் நடிக்க ஆடிஷன் நடந்து கொண்டிருந்ததாகவும் அதில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு வந்ததாகவும் பேட்டி ஒன்றில் நிவேதா பெத்துராஜே தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்க ஆசைப்பட்டு ஆடிஷனில் நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டாராம்.
நிவேதா பெத்துராஜ் அங்கு சென்று மிகவும் ஜாலியாக நடித்து காமித்தாராம். ஆனால், அவர் நடிப்பு மணிரத்னதிற்கு பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்ற காரணத்தால் அவரை தேர்வு செய்யவில்லையாம். அதைப்போல, பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ல் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கவும் தன்னை அழைத்ததாகவும் நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை நிவேதா பெத்துராஜ் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக அவருக்கும் பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக குவிந்து இருக்கும். ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாக நிவேதா பெத்துராஜிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகளே வரவில்லை கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான பூ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…