shamna kasim [File Image]
பூர்ணா : தமிழ் சினிமாவில் முனியாண்டி ,கொடிவீரன், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணா. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கதைகளைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், இவருடைய நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பிசாசு 2 விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை பூர்ணா ” நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது ஒருவர் மீது எனக்கு காதல் வந்தது.
நான் படித்தது பெண்கள் பள்ளி எதிரில் ஒரு ஆண் பள்ளி இருந்தது. அதில் தான் அவர் படித்து கொண்டு இருந்தார். நான் பள்ளிக்கூடம் முடிந்து வேனில் வீட்டிற்கு செல்வேன். அப்போதிலிருந்து அவர் எனக்காக ரோட்டில் காத்திருந்து என்னை பார்த்துவிட்டு தான் செல்வார். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலே கண்களில் காதலித்து கொண்டு இருந்தோம்.
காதலர் தினத்தன்று, சில சாக்லேட்டுகள் மற்றும் ரோஜாக்களை ஒன்றாக கொடுத்தோம். இருப்பினும், இந்த காதல் ஒரு ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு சில காரணங்களால் நீடிக்கவில்லை” எனவும் நடிகை பூர்ணா தனது பள்ளி பருவ காதல் பற்றிய ரகசியத்தை உளறி கொட்டியுள்ளார்.
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…