தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் எப்போதும்’ , காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது நீண்ட கால காதலியான ரக்ஷிதா ரெட்டியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இன்று சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. ரக்ஷிதா ரெட்டி, மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளும் ஆவார்.
மேலும், இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.விழாவில் ராம் சரண், உபாசனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் திருமண தேதி மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சர்வானந்த் தற்போது கிருஷ்ண சைதன்யா இயக்கும் “ஒகே ஓக ஜீவிதம்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…