‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் எப்போதும்’ , காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sharwanand Engagement
sharwanand Engagement [Image Source : Twitter]

இந்நிலையில், இவர் தனது நீண்ட கால காதலியான ரக்ஷிதா ரெட்டியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இன்று சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.  ரக்ஷிதா ரெட்டி, மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளும் ஆவார்.

மேலும், இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.விழாவில் ராம் சரண், உபாசனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில்  திருமண தேதி மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சர்வானந்த் தற்போது கிருஷ்ண சைதன்யா இயக்கும் “ஒகே ஓக ஜீவிதம்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்