பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார்.
ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட பதிவுகள் வைரலாகி வந்தது.
இதையும் படியுங்களேன்- ஷங்கர் படத்துல நான் நடிக்க வேண்டியது.. ஜஸ்ட் மிஸ்.! ஷகீலா கூறிய ரகசிய தகவல்.!
அதில் விஜியின் ஜில்லா திரைப்படம் சுறா படத்தின் 2-வது பாகம் போல இருந்ததாகவும், யுவன் ஷங்கர் ராஜா வெஸ்ட் ஒரு ஃப்ராடு’ எனவும் பதிவிட்டிருந்தார். அதைப்போல கிரிக்கெட் வீரர் சச்சினையும் தகாத வார்த்தைகளால் தீட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் போஸ்ட்களை கிளறி எடுத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்த பிரதீப், ட்விட்டரில் வருத்ததுடன் விளக்கம் கொடுத்துள்ளார். சில பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாகவும், சில பதிவுகள் உண்மை தான் என்றாலும் பழைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…