ஷங்கரின் இந்தியன் 2 வை விட்டு அடுத்த படத்தை இயக்க ரெடியாகி விட்டாரா
நடிகர் ஷங்கர் கோலிவுட் வட்டாரத்தில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ,நடிகைகளும் காத்திருக்கிறார்கள். இவர் படங்கள் என்றாலே படுமாஸ் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே.
இவர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்புகள் தொடக்கி 4 நாட்களில் கமலின் ஒப்பனை சரிவர இல்லாததால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது. இந்நிலையில் ஷங்கர் இந்த படத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
இவர் தற்போது அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் அவர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தை போல் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.