நன்றி கமல் சார்…! மீண்டும் சந்திப்போம்… இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்.!
‘இந்தியன்-2’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், தீபா சங்கர், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், ஒரு நல்ல பவர்ஃபுல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதற்கு கமலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Thank you for this power-packed Schedule @ikamalhaasan sir ???? See you again in May! Will be moving from #Indian2Gamechanger for the climax!!! pic.twitter.com/J7WGmzCuxb
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 18, 2023
தற்போது ‘கேம்சேஞ்சர்’ படத்தின் க்ளைமேக்ஸ் எடுக்க செல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ராம்சரணை வைத்து ‘கேம்சேஞ்சர்’ என்ற படத்தையும் ஷங்கர் எடுத்து வருகிறார்.
இதை வைத்து பார்க்கும் பொழுது, இயக்குனர் ஷங்கர் இந்த கோடையில் இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் கேம் சேஞ்சரின் படப்பிடிப்பையும் எடுத்து வருகிறார். கேம் சேஞ்சர் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும்.