ஷங்கர் 25! கொண்டாடிய மணிரத்னம் , கெளதம் மேனன், மிஷ்கின் இன்னும் பலர்!
தமிழ் சினிமாவில் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரமாண்டமும் காட்டி பிரமாண்ட வெற்றியும் அடைந்தார் ஜென்டில்மேன் படம் மூலம். அடுத்தடுத்து, தனது படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குனர் என்ற பட்டதையும் பெற்றுள்ளார். இவரது படங்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுகிறாரோ அந்த அளவிற்கு தனது படங்களில் சமுக கருத்துகளையும் வைத்து விடுவார்.
இவரது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் 1993 இல் வெளியாகி இருந்தது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை அடுத்து, இயக்குனர் மிஷ்கின், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களை அழைத்து அதனை கொண்டாடியுள்ளார். இதில் தமிழசினிமாவின் முன்னனி இயக்குனர்களான, மணிரத்னம், பாண்டிராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, அட்லீ, ரஞ்சித், வசந்தபாலன், சசி என பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
DINASUVADU