சாப்பாட்டுக்காக கேப்டன் விஜயகாந்த் பட்ட அவமானம்! அதே நாளில் எடுத்த அதிரடி முடிவு?
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னவுடனே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், அந்த அளவிற்கு சாப்பாடுகளின் மூலமே பலருடைய பசியை ஆற்றி இருக்கிறார். அவருடன் படங்களில் பணியாற்றிய பல பிரபலங்களும் விஜயகாந்த் கொடுத்த சாப்பாட்டில் எங்களுடைய உடல் இடையே அதிகமாகிவிட்டது என்று கூறுவார்கள்.
read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?
இந்நிலையில், இப்படி சாப்பாடு போட்டு மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்த்த விஜயகாந்த் அனைவர்க்கும் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார் தெரியுமா? அந்த தகவலை தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்வதற்கு முன்பு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து வந்தார்.
read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?
அந்த சமயம் தான் விஜயகாந்த் ஒரு முறை சாப்பிட அமர்ந்து இருந்தபோது அங்கு அவருடன் இருந்த அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தார்களாம். ஆனால், விஜயகாந்திற்கு மட்டும் சாப்பாடே கொடுக்கவில்லையாம். எல்லாரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் விஜயகாந்திற்கு சாப்பாடு கொடுத்தார்களாம். அதுவும் சரியான சாப்பாடு இல்லயாம்.
read more- 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!
முடிந்து போன சாப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விஜயகாந்திடம் கொடுத்தார்களாம். அந்த நாளில் தான் முடிவு எடுத்தாராம். நம்ம இப்படி அவமானம் பட்டது போல இனிமேல் யாருமே படவே கூடாது சாப்பாட்டை பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் கொடுக்கவேண்டும் என்று முடிவு எடுத்தாராம். பிறகு தான் உழவன் மகன் பட சமயத்தில் தான் பாகுபாடே இல்லாமல் விஜயகாந்த் பலருக்கும் சாப்பாடு போட தொடங்கினாராம்.
ஹீரோ என்ன சாப்பாடு சாப்பிடுகிறாஅதே சாப்பாடு தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று முடிவு எடுத்து சாப்பாடு போட்டாராம். எல்லாருக்கும் சிக்கன் மட்டன் என சாப்பாட்டையும் அவர் கொண்டு வந்தாராம். அந்த சமயம் நாயகன் படத்தின் படப்பிடிப்பில் தயிர் சாதம் கொடுத்தார்களாம். ஆனால், உழவன் மகன் படப்பிடிப்பு தளத்தில் சிக்கன் மட்டன் சாப்பாடு விஜயகாந்த் போட்டாராம். இந்த தகவலை அவருடன் பல படங்களில் பணியாற்றி அவருடனே இருந்த மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.