சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என்று கூறலாம். இதுவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் வெற்றிகரமாக ஓடி கொன்டு 9 -வது வாரத்தை கடந்துள்ளது. இருந்தாலும் வழக்கமாக இருக்கும் சீசனை போல இந்த சீசன் அந்த அளவிற்கு விறு விறுப்பாக இல்லை என்றே பலரும் கூறிவருகிறார்கள்.
ஏனென்றால், இதுவரை நடந்த சீசன்களில் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் வீட்டிற்குள் காதல் ஜோடி காதலிப்பார்கள். அது பார்வையாளர்களை வெகுவாக கவரும். ஆனால், இந்த சீசனில் பெரிய அளவில் சண்டைகளும் காதல் போன்ற மக்களை கவர கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை என்ற காரணத்தால் மக்கள் பலரும் இந்த சீசன் மிகவும் போர் ஆக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் மக்களை போலவே பிரபல நடிகையான ஷகீலா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பயங்கரமான மொக்கையாக இருக்கிறது. ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் பேசிக்கொண்டு மட்டும் தான் இருக்கிறார்கள். தெலுங்கு பிக்பாஸ் போய் பாருங்கள் எந்த மாதிரியான விளையாட்டுகள் எல்லாம் இருக்கிறது என்று.
எங்களுக்கு அடையாளம் கொடுத்த வீடு அது! பூர்ணிமா செயலால் கொந்தளித்த சனம் ஷெட்டி!
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி பல வாரங்கள் ஆகிவிட்டது ஆனால் இப்போதுதான் விளையாட்டை ஆரம்பிப்பது போல பூகம்பம் என்ற டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை தெலுங்கில் எல்லாம் மிகவும் சவாலான விளையாட்டுகளை கொடுக்கிறார்கள். வெளிப்படையாக நாமினேஷன் செய்வதாக இருக்கட்டும் மற்ற விஷயங்கள் எல்லாம் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது.
ஆனால் தமிழில் அப்படி அந்த அளவிற்கு எதுவுமே நடக்கவில்லை. எனவே இந்த சீசன் மிகவும் போராக இருக்கிறது . அர்ச்சனாவை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. எப்ப பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறார் . பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுடைய கதையை சொன்னால் நாம் தான் அழுக வேண்டும் ஆனால் அவர்களை சொல்லிவிட்டு அவர்களை அழுகிறார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது மொக்கையாக இருக்கிறது” என கூறியுள்ளார். மேலும் ஷகீலா பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…