இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வெற்றி பெற்றது.
ஹிந்தி திரைப்பட பாணியில் எடுக்கப்பட்டு பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி ஒன்றை மாதங்கள் கடந்த நிலையில், OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜியோசினிமாவில் வெளியாக இருந்த நிலையில், நேற்று காதலர்கள் தினத்தை முன்னிட்டு பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்ய தொடங்கியது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். மேலும், விக்கி கவுஷல், போமன் இரானி, அனில் குரோவர் மற்றும் விக்ரம் கோச்சார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…