ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

Dunki OTT release

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வெற்றி பெற்றது.

ஹிந்தி திரைப்பட பாணியில் எடுக்கப்பட்டு பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி ஒன்றை மாதங்கள் கடந்த நிலையில், OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜியோசினிமாவில் வெளியாக இருந்த நிலையில், நேற்று காதலர்கள் தினத்தை முன்னிட்டு பிரபல  OTT தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்ய தொடங்கியது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். மேலும், விக்கி கவுஷல், போமன் இரானி, அனில் குரோவர் மற்றும் விக்ரம் கோச்சார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்