டெல்லியில் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய ஷாருக்கான்.!
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று அதிகாலை டெல்லியில் இளம் பெண் அஞ்சலி சிங் என்பவர் தனது தோழியுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் காருக்கு கீழே அஞ்சலி சிங் சில கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் தன்னார்வ தொண்டு நிறுவனமான மீர் அறக்கட்டளை ( meerfoundation) டெல்லியில் காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த 20 வயது அஞ்சலி சிங்கின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த அறக்கட்டளை கடந்த 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஷாருக்கானின் இந்த மீர் அறக்கட்டளை அவருடைய தந்தை மீர் தாஜ் முகமது கானின் பெயரிடப்பட்ட ஒரு பரோபகார அறக்கட்டளை ஆகும். பெண்களை மேம்படுத்துவதற்காக இந்த அறக்கட்டளை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.