களைகட்டும் ‘ஜவான்’ ப்ரீ ரிலீஸ் விழா: ஷாருக்கான் வருகை கண்டு அரங்கமே அலறல்!
‘ஜவான்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டதால் அரங்கமே திருவிழா போல் கலைக்கட்டியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சிமர்ஜீத் சிங் நாக்ரா, அஸி பாக்ரியா, மன்ஹர் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஜவான் படத்திற்கான ட்ரைலர் , மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமஷன் பணி தொங்கிய நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஒரு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்த படக்குழு ஏற்பாடு செய்தனர். அதன்படி, இந்த நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) மாலை 3 மணிக்கு தொடங்கியது.
பிரபலங்கள் பலர் நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், ரசிகர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். இந்த நிகழ்விற்கு ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் வருகை தந்துள்ளதால் ஒரு திருவிழா அரங்கமாக மாறியுள்ளன. தற்போது, நிகழ்விற்கு கிங் காங் என்று அழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ வருகையால் அரங்கமே ரசிகர்களின் அலறலால் கலகலப்பாக மாறியுள்ளது.
Complete entry of King Khan SRK at the event ????#JawanPreReleaseEvent pic.twitter.com/WRjgsAijQt
— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) August 30, 2023
நிகழ்வுக்கு வருகை தந்தவுடன் ஷாருக்கான், விஜய் சேதுபதி – அனிருத்தை கட்டி அணைக்கும் முத்தமிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜவான் பட டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 31) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோ நாளை துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்படுகிறது.