பாலிவுட்டை மிரள வைத்த ஷாருக்கான்… ‘1000’ கோடி வசூலை நெருங்கிய “பதான்”..!
கடந்த ஆண்டில் இருந்தே பாலிவுட் சினிமாவில் இருந்து வெளியான படங்கள் பெரிய அளவிற்கு வெற்றியை பெற்று வசூலை குவிக்க வில்லை. ஆனால் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பதான் திரைப்படம் பாலிவுட் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே மிரள வைத்துள்ளது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது வரை படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 981 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் படம் 612 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The victory streak continues ♥️♥️
Book your tickets for #Pathaan NOW – https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBjCelebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/rV7IFw5AOF
— Yash Raj Films (@yrf) February 18, 2023
இதுவரை இந்தியில் வெளியான எந்த திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. முதல் முறையாக 981 கோடி விரைவாக வசூல் செய்து இந்தி சினிமாவில் புதிய சாதனையை பதான் திரைப்படம் படைத்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படம் 1000 கோடி வசூலை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.