இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானா? இது உண்மைதானா?
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார். இதனையடுத்து, இவர் தளபதி விஜயின் தேறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது இவர் தளபதி விஜயின் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் விஜயின் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஒரு படததகி இயக்கவுள்ளதாகவும், இப்படம் அதிரடி ஆக்சன் கதையம்சங்களை கொண்டதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் படம் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.