அடுத்த 1000 கோடி வசூலுக்கு தயாரான ஷாருக்கான்! எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டன்கி’ டீசர்!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பதான் திரைப்படம் கடந்த உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படமும் 1,100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக ஷாருக்கானின் படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருவது பாலிவுட் திரையுலகத்தை மிரள வைத்துள்ளது.
இந்த இரண்டு படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவருடைய இயக்கத்தில் ‘டன்கி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இன்று நடிகர் ஷாருக்கான் தன்னுடைய 58-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு ‘டன்கி’ திரைப்படத்திற்கான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Hardcore Emotions and Power Packed Comedy The Raju hirani directorial #Dunki is going to be the HIGHEST GROSSER OF THE YEAR #DunkiDrop1 #ShahRukhKhan #RajuHirani#HappyBirthdaySRK #DunkiTeaser pic.twitter.com/NGuWpZRJmU
— Ahmed (FAN) (@AhmedKhanSrkMan) November 2, 2023
டீசரை பார்க்கையில் இந்த படம் முழுக்க முழுக்க ஹிந்தி மொழிக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படம் போல தெரிகிறது. இருப்பினும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது போல இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. எனவே, இதன் காரணமாக ஜவான், பதான் ஆகிய படங்களை தொடர்ந்து ஷாருக்கானுக்கு 1000 கோடி வசூலை கொடுக்கும் படமாக இருக்கும் என தெரிகிறது.