கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டும் நடிகர் ஷாருக்கான்!
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோயானது மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உதாரவாய் பிறப்பித்துள்ளார். இதனால், ஏழை மக்கள் உணவிற்கு கூட திண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இப்படிப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும். மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.