பெரிய பிரச்சனையில் இருந்து பிரபல நடிகரை காப்பாற்றிய விஜயகாந்த்!

நடிகர் விஜயகாந்த் உணவு போட்டு உதவி செய்ததை போல நடிகர் சங்கத்தில் இருந்தபோது பலருடைய பிரச்சனைகளையும் பேசி தீர்த்து முடித்து கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாம் பிரச்னையை சொல்லாமல். தமிழ் சினிமாவில் குஷி, லேசா லேசா, வாரிசு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஷாம்.
ஷாம் ஒருமுறை சம்பளம் முழுவதுமாக கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாக பிரச்சனைகள் எழுந்ததாம். அந்த சமயம் இவரை மிரட்டுவதற்காக 10 பேர் அவருடைய வீட்டிற்கு சென்றார்களாம். இதனால் பயந்துபோன ஷாம் உடனடியாக விஜயகாந்திற்கு கால் செய்துவிட்டாராம். கால் செய்துவிட்டு “சார் இந்த மாதிரி என்னுடைய வீட்டிற்கு 10 பேர் வந்து இருக்கிறார்கள்” என்று கூறினாராம்.
விஜயகாந்த் உடல்நிலை நினைத்து உயிர்விட்ட வேலுமணி…உதவிய பிரேமலதா விஜயகாந்த்.!
பிறகு இதனை கேட்ட விஜயகாந்த் நீ முதலில் உன்னுடைய போனை ஆப் செய்துவிட்டு நன்றாக தூங்கு என்று கூறினாராம். கூறிவிட்டு ஆட்களை அனுப்பிய அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கால் செய்து இனிமேல் அது ஷாம் பிரச்சனை இல்லை என்னுடைய பிரச்சனை அவனை எதுவும் தொந்தரவு செய்ய கூடாது என்று கூறினாராம்.
பிறகு ஷாம்க்கு கால் செய்து இந்த பிரச்சனை பற்றி பேசுவதற்கு நீ எங்கையும் வரவே கூடாது. இந்த பிரச்னையை நான் உனக்கு முடித்து தருகிறேன் நீ கவலை படாதே என்று கூறி அந்த பிரச்சனையை முழுவதுமாக முடித்து கொடுத்தாராம். இந்த தகவலை நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தான் மதுரையை சேர்ந்தவர் என்பதால் கேப்டனுக்கு தன்னை ரொம்பவே பிடிக்கும் எனவும் ஷாம் தெரிவித்துள்ளார்.
இப்படி பலருடைய பிரச்சனைகளை போக்கி பலருக்கும் உணவு கொடுத்து உதவி செய்த விஜயகாந்த் தற்போது உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு விரைவில் குணமடைந்து விரைவில் பழையபடி திரும்பி வரவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025