Categories: சினிமா

பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலை …!1 ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு …!

Published by
Venu

தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்  கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை.
Related image
ஆனால் இவரது குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்.லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.

பின்னர்  கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்தார்.கவிஞர் லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர் சுசி கணேசன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில்  மீ டூ-(#MeToo )வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்

Published by
Venu

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

5 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

7 hours ago