பல வருடங்களுக்கு பின்பு சினிமாவில் பிரபல நடிகருடன் நடிக்கும் ஷோபனா
நடிகை ஷோபனா 15வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தில் நாயகனாக சுரேஷ் கோபி நடிக்க இருக்கிறார்.
நடிகை ஷோபனா 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் ஒருவர். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
இதையடுத்து நடிகை ஷோபனா பாரத நாட்டியத்தில் மிகவும் புகழ் பெற்றவர்.எனவே இவர் நடிப்பதை விட்டு விட்டு தற்போது முழு நேர பாரத நாட்டிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வில்லை. இவர் இறுதியாக 2005 ஆம் ஆண்டு “மகளுக்கு” எனும் மலையாள படத்தில் இவர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் இயக்கும் படத்தில் ஷோபனா நடிக்க இருக்கிறாராம். அந்த படத்திலும் இவருக்கு ஜோடியாக சுரேஷ் கோபி நடிக்கிறாராம்.