இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. ஆணையர் ஏ.ஆர். ரஹ்மான் அவருடைய படைப்புகளுக்கு, 6 கோடி-யே 79 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஹ்மான் கடந்த 2020 ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இசை படைப்புகளின் காப்புரிமை அனைதையும், பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக நான் வழங்கிவிட்டேன். எனவே, அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். இதனால் என்னிடம் வரியை வசூல் செய்வது சட்டவிரோதம் என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் மனுவில் கூறியிருந்தார்.
பிறகு இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஏ.ஆர். ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய காரணம் என்னவென்றால், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையை வைத்துதான் அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவருடைய புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டிருந்தது. மேலும் ஜி.எஸ்.டி ஆணையர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 1 கோடி 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என அவருக்கும் நோட்டிஸ் அனுப்பியது. எனவே, ரஹ்மான் போலவே ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, அனிதா சுமந்த் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார் , ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யவும், வரி விதிப்பது தொடர்பான நோட்டீஸ்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் அளிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு சென்னை உயர்நிதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…