இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி, என அனைவரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய விஜய்சேதுபதி ” ஷாருக்கான் சாருடன் நடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவர்க்கும் நன்றி. நான் முன்னாடி ஒரு பொண்ணை காதலித்தேன். அந்த பெண்ணிடம் என்னுடைய காதலை சொன்னேன்.
அதற்கு அந்த பொண்ணு நான் ஷாருக்கானை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டது. அதற்கு பழி வாங்கவேண்டும் என்று நினைத்தேன் பழிவாங்க இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது” என மிகவும் நக்கலாக விஜய் சேதுபதி பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய்சேதுபதி ” முக்கியமாக நான் யோகி பாபுவை பற்றி பேச விரும்பிகிறேன். அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை கேட்டவுடன்.
சம்மதம் தெரிவித்துவிட்டு பாத்துக்கலாம் என்று சொல்வார். பிறகு அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை தனக்குள் எடுத்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். அதை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும்” என யோகிபாபுவை விஜய்சேதுபதி புகழ்ந்து பேசினார்.
மேலும், அவரை தொடர்ந்து பேசிய படத்தின் எடிட்டர் ரூபன் “ஜவான் திரைப்படத்தில் விஜய்சேதுபதி கொடூரமான வில்லனாகவும், நயன்தாரா ஆக்ஷன் ஹீரோயினாகவும் பணியாற்றியுள்ளனர். படத்தை பார்க்கும்போது விஜய்சேதுபதியை பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன்” என கூறிள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…