தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கவிருக்கும் சீரியல் நடிகை….!!!
சீரியலில் நடிக்கும் பல நடிகைகள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். பல சீரியல் நடிகைகளுக்கு சீரியலில் நடிக்கும் போதே பல ரசிகர்கள் அவர்களுக்கு இருப்பதுண்டு. இந்நிலையில் இவர்கள் தமிழ் சினிமாவிற்கு வரும் போது ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான திவ்யா கணேஷ், தற்போது ஒரு மலையாள படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். தமிழ் பெண்ணான இவர் தெலுங்கிலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.