எனது மகனால் பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் செந்தில் – ஸ்ரீஜா நெகிழ்ச்சிபதிவு.! குவியும் வாழ்த்துக்கள்..!
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்- ஸ்ரீஜா. இந்த சீரியலில் நடித்திருந்த இவர்களின் ஜோடி பொருத்தம் பலருக்கும் பிடித்துப்போக, இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர்.
எனவே, ரசிகர்கள் எதிர்பார்த்த படியே செந்தில்- ஸ்ரீஜா ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக வளைகாப்பு போட்ட புகைப்படத்தை வெளியீட்டு செந்தில் அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்களேன் – வடிவாசலை முடிக்காத வெற்றிமாறன்… சுதா கொங்கரா பக்கம் தஞ்சம் அடைந்த சூர்யா.!?
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை செந்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் ” பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று” என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
மேலும் செந்தில்- ஸ்ரீஜா திருமணம் முடிந்து சில வருடங்களுக்கு பிறகு, “மாப்பிள்ளை” தொடரில் நடித்து வந்தனர். அந்த சீரியலிலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அடிக்கடி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.